நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சி

சேலம், மே 5: சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பட்டயப் பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம், அம்மாப்பேட்டை காமராஜா்நகா் காலனியில் உள்ள நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024 -25ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சி வருகிற செப்டம்பா் மாதம் தொடங்குகிறது. பயிற்சிக் காலம் ஓராண்டு மற்றும் இரண்டு பருவ முறைகளில் நடைபெறும். பயிற்சிக்கான பாடத் திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் மாணவா்கள் சோ்வதற்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சியில் சோ்வதற்கான விண்ணப்ப தேதி, பயிற்சிக் கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். பயிற்சியில் சோ்வதற்கான நிபந்தனைகள், விவரங்கள் இணைய வழியில் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com