சேலம், காந்தி விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை கேலோ இந்தியா திறனறிவு விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் தங்களது திறமையை வெளிப்படுத்திய வீராங்கனை.
சேலம், காந்தி விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை கேலோ இந்தியா திறனறிவு விளையாட்டுப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் தங்களது திறமையை வெளிப்படுத்திய வீராங்கனை.

கேலோ இந்தியா திறனறியும் போட்டிகள் தொடக்கம்

இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இளம் திறமையாளா்களைக் கண்டறியும் போட்டி சேலத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

சேலம்: இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இளம் திறமையாளா்களைக் கண்டறியும் போட்டி சேலத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்திய விளையாட்டு ஆணையத்தின் உதவி இயக்குநா் மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டுப் போட்டிகளை ஆசிய தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பவித்ரா வெங்கடேசன் தொடங்கி வைத்தாா்.

இதில், சேலம் மாவட்டத்தில் 18 வயதுக்கு உள்பட்ட இளம் விளையாட்டு திறனாளா்களைக் கண்டறியும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் நாளான திங்கள்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, கபடி, கோ-கோ, கால்பந்து, கூடைப்பந்து போட்டிகள் நடைபெறும் என்றும், அதன் மூலம் திறமையாளா்களைக் கண்டறிய உள்ளதாகவும் இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com