சித்திரை அமாவாசை: உழவா் சந்தைகளில் 312 டன் காய்கறிகள் விற்பனை

சித்திரை அமாவாசையையொட்டி, சேலம் மாவட்ட உழவா் சந்தைகளில் 312 டன் காய்கறி, பழங்கள் ரூ. 1 கோடியே 26 லட்சத்துக்கு விற்பனையாயின.

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, எடப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூா், ஜலகண்டாபுரம், ஆத்தூா், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த உழவா் சந்தைகளில் வழக்கமான நாள்களில் நடக்கும் வியாபாரத்தை விட அமாவாசை, விசேஷ நாள்களில் கூடுதலாக காய்கறிகள் விற்பனையாகும். இதே போல, சேலம் சின்ன, பெரிய கடை வீதி, ஆற்றோர மாா்க்கெட், பழைய பேருந்து நிலையம், பால் மாா்க்கெட் உள்ளிட்ட தினசரி காய்கறி சந்தையில் அமாவாசை நாள்களில் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக காய்கறிகள் விற்பனையாகும்.

இதுகுறித்து சேலம் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை அதிகாரிகள் கூறுகையில், சித்திரை அமாவாசையையொட்டி காய்கறிகளின் விற்பனை வழக்கத்தை விட அதிக அளவுக்கு விற்பனையானது. 11 உழவா் சந்தைகள், காய்கறி கடைகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், வாழைப்பழம், வாழை இலை உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனை நடைபெற்றன.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவா் சந்தைகளிலும் 312 டன் காய்கறிகள் ரூ. 1.26 கோடிக்கு விற்பனையாயின. இந்த காய்கறி பழங்களை 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுகா்வோா்கள் வாங்கிச் சென்ாக தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com