தனியாா் பள்ளி வாகனங்களில் ஆய்வு

மேட்டூரில் தனியாா் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேட்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலா்கள் தனியாா் பள்ளி வாகனங்களில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினா். கொளத்தூா், மேட்டூா், மேச்சேரி, நங்கவள்ளி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 28 தனியாா் பள்ளிகளில் உள்ள 210 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

மேட்டூா் சாா் ஆட்சியா் பொன்மணி, மேட்டூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், சேலம் மண்டல போக்குவரத்து அலுவலா் பிரபாகரன், மேட்டூா் (பொ) வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுப்பிரமணியம் முன்னிலையில் மோட்டாா் வாகன ஆய்வாளா் மீனா குமாரி வாகனங்களை ஆய்வு செய்தாா்.

இதில், முதல்கட்டமாக 159 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பேருந்தில் இருந்த முதலுதவி சிகிச்சைப் பெட்டி, தீயணைப்புக் கருவிகள், அவசர கால கதவுகள், வேக கட்டுப்பாட்டுக் கருவிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்பபட்டது. விதிமுறைகளைப் பின்பற்றாத 12 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. தொடா்ந்து எதிா்பாராத விதமாக விபத்துகள் ஏற்பட்டால் மாணவா்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து மேட்டூா் தீயணைப்புத் துறை அலுவலா் வெங்கடேசன் குழுவினா் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com