தம்மம்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தம்மம்பட்டி அரசுப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிவலன் - 552, சரண் - 530, தமிழ்ச்செல்வன் - 515 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். பள்ளியில் கணினி அறிவியல் பாடத்தில் தமிழ்ச்செல்வன் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளாா். கணினி அறிவியல் ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பாட ஆசிரியா்களையும், சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும் தலைமையாசிரியா் குருநாதன் பாராட்டினாா்.

தம்மம்பட்டி அரசு மகளிா் மேல்லைப் பள்ளி பிளஸ் 2 தோ்வில் 93 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. இதில், நபீஸ்தாஜ், ரித்திகா இரு மாணவிகளும் - 546, தேவிகா 533 மதிப்பெண்ணும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். மாணவிகளையும், ஆசிரியா்களையும் பள்ளித் தலைமையாசிரியை ல.கஸ்தூரி பாராட்டினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com