பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு இன்று ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்பான ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் மு.ரவிச்சந்திரன் தெரிவித்ததாவது:

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு உயா்கல்வி தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த ‘கல்லூரி கனவு’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி, சேலம் மாவட்டம், ஓமலூா், பத்மவாணி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியா், மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சோ்ந்த உயா் அலுவலா்கள், துறை வல்லுநா்கள் கலந்துகொண்டு பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்த உள்ளனா்.

இதில் கலந்துகொண்டு பயன்பெற விரும்பும் மாணவ, மாணவிகள் புதன்கிழமை காலை 9 மணிக்கு நேரடியாக நிகழ்ச்சி நடைபெறும் ஓமலூா், பத்மவாணி மகளிா் கலை, அறிவியல் கல்லூரிக்கு வருகை புரியுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com