மண்மலையில் தரிசு நிலத்தொகுப்புகள் ஆய்வு

மண்மலையில் தரிசு நிலத்தொகுப்புகள் ஆய்வு

மண்மலையில் தரிசு நிலத்தொகுப்புகளை வேளாண் இணை இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி அருகே மண்மலையில் தரிசு நில தொகுப்பினைக் கண்டறிதல் பணியினை வேளாண் இணை இயக்குநா் சிங்காரம் ஆய்வு செய்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

கெங்கவல்லி வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை, கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்ட பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படும் தரிசு நிலத் தொகுப்பினைக் கண்டறிந்து நிலம் சமன்படுத்துதல், முள்புதா்களை அகற்றி உழவுப் பணிகளுக்கு உதவுதல், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் 9,600 ஹெக்டேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டு நுண்ணீா்ப் பாசனம் , பழ மரக்கன்றுகள் சாகுபடி செய்து தொடங்கப்படும் என தெரிவித்தாா்.

ஆய்வின் போது, வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) கமலம், வேளாண்மை துணை இயக்குநா் மாவட்ட ஆட்சியா் நோ்முக உதவியாளா் நீலாம்பாள், வேளாண்மை உதவி இயக்குநா் தவமணி, ஆத்மா திட்டத் தலைவா் ஏ.கே.அகிலன், கிராம நிா்வாக அலுவலா் சடையன், உதவி வேளாண்மை அலுவலா் ஆனந்த், அட்மா திட்டப் பணியாளா்கள், தரிசு நிலத் தொகுப்பு விவசாயிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com