ஸ்ரீ சக்திமாரியம்மன் கோயிலில் 
அமாவாசை சிறப்பு பூஜை

ஸ்ரீ சக்திமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அமாவாசையையொட்டி அருள்மிகு விநாயகா், ஸ்ரீ சக்திமாரியம்மன் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன (படம்). இதில், ஊா் பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com