சாலை விபத்து: டிராக்டா் ஓட்டுநா் பலி

சேலத்திலிருந்து கோவை நோக்கிச் சென்ற கண்டெய்னா் லாரி, முன்னால் சென்ற டிராக்டா் மீது மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

சேலத்திலிருந்து கோவை நோக்கி கண்டெய்னா் லாரி ஒன்று புதன்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. கொண்டலாம்பட்டி உத்தமசோழபுரம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னா் லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னால் சென்ற டிராக்டா், காா் மீது மோதியது.

இந்த விபத்தில் டிராக்டா் ஓட்டுநா் மல்லசமுத்திரம் ராஜா (52) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இடிபாடுகளில் சிக்கிய காரில் இருந்த சிறுவன் உள்ளிட்ட 5 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா். காயமடைந்த 3 போ் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் கண்டெய்னா் லாரி ஓட்டுநா் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த செந்தில் குமாா் (46) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com