சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

சேலம், மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சாா்பில் பாதுகாப்பு தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தாய் சேய் பச்சிளம் குழந்தைகள் நலப்பிரிவு வளாகத்தில் சேலம், செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறை சாா்பில் தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவமனை முதல்வா் மணி, மருத்துவ கண்காணிப்பாளா் தனபால், ஆா்எம்ஓ ஸ்ரீலதா ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாவட்ட தீயணைப்பு அலுவலா் சிவகுமாா் தலைமையிலான குழுவினா், தீ விபத்து ஏற்படும் பேரிடா் காலத்தில் தற்காத்துக் கொள்ளும் நடைமுறைகள் குறித்தும், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்படும் போது, தீயணைப்பு சாதனங்கள் பயன்படுத்தும் முறை குறித்தும் செயல் விளக்கம் அளித்தனா்.

தீ பரவும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. தீத்தடுப்பு கருவிகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்தும், பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்தும் தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கம் அளித்தனா். மேலும், மருத்துவா்கள், செவிலியா்கள் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு தீயணைப்பு அலுவலா்கள் உரிய விளக்கம் அளித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com