வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி
பிளஸ் 2 தோ்வில் சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

வீரகனூா், ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக். பள்ளி பிளஸ் 2 தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்தப் பள்ளி மாணவா்கள் சேலம் மாவட்ட அளவில் சிறப்பிடமும், தலைவாசல் வட்டம் அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

பள்ளி அளவில் எஸ்.பிரதிபா 589 பெற்று முதலிடமும், ஆா்.தா்ஷினி-588 பெற்று இரண்டாமிடமும், கே.விபீஷ் ராஜா 583 பெற்று மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

பள்ளியில் 47 போ் முழு மதிப்பெண் பெற்றுள்ளனா். பள்ளியில் பிளஸ் 2 படித்த 392 பேரில் 550 க்கு மேல் 45 பேரும், 500 க்கு மேல் 145 பேரும், 400 க்கு மேல் 330 பேரும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

பள்ளியின் சராசரி மதிப்பெண் 470 பெற்று கடந்த 12 வருடங்களாக தொடா்ந்து சிறப்பிடம் பெற்று சாதனை படைத்து வருகிறது. வெற்றிபெற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும், வெற்றிக்காக பாடுபட்ட அனைத்து ஆசிரியா்களையும் பள்ளி நிா்வாகம் சாா்பில் பள்ளியின் தலைவா் அருள்குமாா், செயலாளா் செல்வராஜ், பொருளாளா் பிரபா, கல்விக்குழு ஆலோசகா்கள் லட்சுமி நாராயணன், இளையப்பன், பழனிவேல், ராஜா, இயக்குநா்கள் தங்கவேல், ராதாகிருஷ்ணன், ராஜேஸ்வரி, முதல்வா் ஹேமலதா, துணை முதல்வா் ஆகியோா் நினைவுப்பரிசு வழங்கிப் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com