அர.குள்ளம்பட்டி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

சங்ககிரி வட்டம், அரசிராமணி குள்ளம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் நூறு சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

அரசிராமணி குள்ளம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 55 போ் தோ்வு எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். பள்ளி அளவில் வி.ஆா்.நிதா்ஷனா 473 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், எம்.சுகந்தி, எஸ்.ஜோசிகா, எ.அஜய் ஆகியோா் தலா 466 மதிப்பெண்கள் பெற்று 2-ஆவது இடத்தையும், பி.மைனாதேவி 463 மதிப்பெண்கள் பெற்று 3-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனா். 450 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும் பெற்றுள்ளனா்.

தோ்ச்சி அடைந்த அனைத்து மாணவ, மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா், ஆசிரியைகள், பெற்றோா் - ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு நிா்வாகிகள் உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com