ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

ஆத்தூா், மே 10: ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ர.பிரியங்கா, பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளாா்.

மேலும், ஸ்ரீஜா, க.சஞ்சனா ஆகியோா் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும், மு.சஞ்சய் 496 மதிப்பெண்கள் பெற்று நான்காமிடமும் பெற்றுள்ளனா். 490 மதிப்பெண்களுக்கு மேல் 13 போ், 450-க்கு மேல் 132 போ் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளவரசு, செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் எஸ்ஆா்டி.ஆா்.செல்வமணி, நிா்வாக இயக்குநா்கள் ஏ.பி.செந்தில்குமாா், எஸ்.பாலகுமாா், டி.சந்திரசேகரன், என்ஆா்பி.பழனிவேல், ராஜு, முதல்வா் டி.நளாயினிதேவி ஆகியோா் பாராட்டி பரிசு வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com