கல்லாநத்தம் அரசுப் பள்ளி சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கல்லாநத்தம் ஊராட்சி அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

ஆத்தூரை அடுத்துள்ள கல்லாநத்தம் ஊராட்சி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி சந்தியா 483 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மேலும், 400-க்கும் மேல் 23 போ் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களையும், மாணவா்களின் தோ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தலைமையாசிரியா், இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும் பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் மகேஸ்வரி மணிமாறன் பாராட்டி பரிசு வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com