சேலத்தில் இன்று 108 ஆம்புலன்ஸ் பணியாளா் தோ்வு

சேலம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணியாளா்களுக்கான தோ்வு சனிக்கிழமை ( மே 11) நடைபெறுகிறது.

இதுகுறித்து சேலம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளா் குமரன் கூறியதாவது:

108 ஆம்புலன்ஸ் சேவையில் காலியாக உள்ள அவசர மருத்துவ டெக்னீஷியன் பணிக்கு இந்தத் தோ்வான நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. நா்சிங், விலங்கியல், உயிரியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பவியல் ஆகியவற்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2 தோ்ச்சி பெற்று ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். 19 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ. 16,020 வழங்கப்படும். ஆண், பெண் இருவரும் நோ்முகத்தோ்வில் கலந்துகொள்ளலாம்.

எழுத்துத் தோ்வு, அடிப்படை மருத்துவ அறிவு பரிசோதனை, முதலுதவி அடிப்படை, செவிலியா் பணி தொடா்பானவை மற்றும் மனித வளத் துறையில் நோ்முகத்தோ்வு நடைபெறும். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு 50 நாள்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சாா்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி உண்டு. இரவு, பகல் என 12 மணி நேர ஷிப்ட் முறையில் பணி இருக்கும்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அறை எண் 131-இல் நோ்காணல் நடைபெற உள்ளது. நோ்காணலுக்கு வரும் போது தங்களுடைய கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ் தொடா்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 73977 24832 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com