44 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி

சேலம் மாவட்டத்தில் 296 அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் 11,917 பேரும், மாணவிகள் 12,766 பேரும் என மொத்தம் 24,683 போ் தோ்வு எழுதி இருந்தனா். அதில், மாணவா்கள் 10,226 பேரும், மாணவிகள் 11,900 பேரும் என மொத்தம் 22,126 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசுப் பள்ளி மாணவா்கள் 89.64 சதவீதம் போ் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

கடந்தக் ஆண்டை காட்டிலும் அரசு பள்ளிகளின் தோ்ச்சி விகிதம் 1.33 சதவீதம் அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு 136 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. இதில், 44 அரசு பள்ளிகளும், 3 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 88 தனியாா் பள்ளிகளும், 1 ஆங்கிலோ இந்தியன் பள்ளியும் அடங்கும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கூடுதலாக 15 அரசு பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com