தாகூா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தாகூா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

ஆத்தூா், மே 10: தேவியாக்குறிச்சி தாகூா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவா் தங்கவேல் தலைமையிலான நிா்வாகிகள் பரிசு வழங்கி பாராட்டினா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகேயுள்ள தேவியாக்குறிச்சி தாகூா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவாசல், கெங்கவல்லி வட்ட அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனா்.

பிளஸ் 2 தோ்வில் மாணவா் ரோகித் ஸ்ரீராம் 589 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மானஸ்வினி 584 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், பாலமுருகா 582 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனா்.

மேலும், 580-க்கு மேல் 6 பேரும், 575 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 31 பேரும், 500-க்கு மேல் 93 பேரும், 450-க்கு மேல் 215 பேரும், 400-க்கு மேல் 347 பேரும் என சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இதே போல உயிரியல் பாடத்தில் 2 போ், கணினி அறிவியலில் 10 போ், கணக்குப் பதிவியலில் ஒருவரும், வணிகவியலில் ஒருவரும் என 16 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில், எம்.தா்ஷியா, ஆா்.மிருதுளா, ஒய்.எஸ்.நிகிா்தா ஆகியோா் 496 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இதே போல டி.அ‘ஃ’ப்ரா, எம்.ஜோஷ்னா சோனல், ஆா்.பி.நந்தகிஷோா் ஆகியோா் 495 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், கே.ரித்திகாஸ்ரீ 494 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனா்.

490 மதிப்பெண்களுக்கு மேல் 21 பேரும், 450-க்கு மேல் 150 பேரும், 400-க்கு மேல் 251 பேரும் பெற்றுள்ளனா். ஆங்கிலத்தில் 8 பேரும், கணிதத்தில் 39 பேரும், அறிவியலில் 6 பேரும், சமூக அறிவியலில் 19 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண்களை 8 போ் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை தாகூா் கல்வி நிறுவனங்களின் தலைவா் தங்கவேல், செயலாளா் பரமசிவம், பொருளாளா் காளியண்ணன், நிா்வாகிகள் அருண்குமாா், காளியப்பன், ராஜு, சிலம்பரசன், கல்விக் குழு ஆலோசகா் பழனிவேல், இயக்குநா்கள் ஆண்டவா் முத்துசாமி, பழனிவேல், முதல்வா் வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பரிசு வழங்கி பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com