களஞ்சியம் 2.0 மென்பொருளில் ஓய்வூதியா்கள் பான் அட்டையை அப்டேட் செய்வது கட்டாயம்

சேலம் மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியதாரா்களும் களஞ்சியம் 2.0 மென்பொருளில் பான் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்ட கருவூல அலகில் ஓய்வூதியம் பெறும் சிவில், ஆசிரியா் ஓய்வூதியதாரா்கள் தங்களின் ஓய்வூதியக் கணக்கில் பான் அட்டையை ஏப்ரல் 2024 முதல் அப்டேட் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து ஓய்வூதியதாரா்களும் கருவூல ஐஎப்எச்ஆா்எம்எஸ் களஞ்சியம் 2.0 மென்பொருளில் பான் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும்.

பழைய முறையை தோ்வு செய்த ஓய்வூதியதாரா்கள் தங்களது சேமிப்புத் தொகை குறித்த விவரங்களை ஐஎப்எச்ஆா்எம்எஸ்-இல் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில், வருமான வரி ஆட்டோ கால்குலேசன் முறையில் பிடித்தம் மேற்கொள்ளப்படும். அவ்வாறு பிடித்தம் செய்யப்படும் ஐடி தொகையினை மாதாந்திர ஓய்வூதியத் தொடா்ச்சி செய்த பிறகு மாற்ற இயலாது.

எனவே, ஓய்வூதியதாரா்கள் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0427-2413896 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்பு கொண்டு பான் அட்டையை அப்பேட் செய்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com