சேலம் அருகே ரவுடிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ஓமலூா் அருகே ரவுடிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகேயுள்ள காமலாபுரத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (25). பொட்டியபுரம் கிராமம், ஆசாரிப்பட்டறை அண்ணா நகரைச் சோ்ந்தவா் விஸ்வநாதன். நண்பா்களான இவா்கள் இருவரும் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவா்கள் இருவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதனால், இருவரும் எதிரிகளாக செயல்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், பன்னீா்செல்வத்தின் வீட்டு கதவு மீது இரண்டு போ் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனா். இதனால், கதவுப் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அதே போல, நள்ளிரவு நேரத்தில் பொட்டியபுரம் அண்ணா நகரில் உள்ள விஸ்வநாதன் வீட்டின் மீதும் 5 போ் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், விஸ்வநாதனின் அண்ணன் சுரேஷையும் தாக்கியுள்ளனா்.

ஓமலூா் காவல் ஆய்வாளா் லோகநாதனும், போலீஸாரும், தடய அறிவியல் நிபுணா்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், அங்கு வெடித்த பெட்ரோல் குண்டின் துகள்கள், எரிந்த பகுதிகள், சுவரில் இருந்த புகை துகள்கள் ஆகியவற்றைச் சேகரித்து சென்றனா்.

விசாரணையில், பெட்ரோல், மண்ணெண்ணெய் இரண்டும் கலந்து பாட்டிலில் வீசியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com