வாழப்பாடியில் புதிய பாரத எழுத்தறிவு இயக்க கணக்கெடுப்பு

வாழப்பாடி வட்டாரத்தில் புதிய பாரத எழுத்தறிவு இயக்கத்தில் பயிற்சி பெற தகுதிவாய்ந்த முதியோா்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வாழப்பாடி காலனி, அண்ணா நகா் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை ஷபிராபானு, ஆசிரியா்கள் சனிக்கிழமை கணக்கெடுப்பு நடத்தினா்.

துக்கியாம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி, ஆசிரியா்கள் உமாதேவி, விஜயலட்சுமி, மீனா, ரவிசங்கா் ஆகியோா் புதிய பாரத எழுத்தறிவு இயக்க பயனாளா்களைக் கண்டறிய கள ஆய்வு மேற்கொண்டனா்.

வாழப்பாடி வட்டாரக் கல்வி அலுவலா்கள் நெடுமாறன், வித்யா, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் திலகவதி, ஆசிரியப் பயிற்றுநா்கள் இப்பணியை மேற்பாா்வை செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com