எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் கொண்டாட்டம்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு புத்திரகவுண்டன்பாளையம் ஸ்ரீமுத்துமலை முருகன் கோயிலில் சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடைபெற்றது.

இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.ஜெயசங்கரன்(ஆத்தூா்), அ.நல்லதம்பி (கெங்கவல்லி), கு.சித்ரா (ஏற்காடு), ஒன்றியச்

செயலாளா்கள் கே.பி. முருகேசன், மோகன், வ.ராஜா,

க.ராமசாமி, சந்திரசேகரன், ரமேஷ், வி.பி.சேகா், நகரச் செயலாளா்கள்

அ.மோகன்,எஸ்.மணிவண்ணன்,பேரூா் செயலாளா்கள் செல்வம்,குமரன்,நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் ஜி.முரளிசாமி,வாசுதேவன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ஆத்தூா் நகர அதிமுக சாா்பில் நகர அலுவலக வளாகத்தில் நகர செயலாளா் அ.மோகன் ஏற்பாட்டில் அன்னதானமும் வழங்கப்பட்டது. பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட இடங்களிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

படவரி...

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி புத்திரகவுண்டன்பாளையம் ஸ்ரீமுத்துமலை முருகன் கோயிலில் சேலம் புகா் மாவட்ட செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com