ஜலகண்டபுரத்தில் ரத்ததான முகாம்

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு ஜலகண்டாபுரம் பேரூா் அதிமுக சாா்பில் செயலாளா் எஸ்.ஆா்.டி. சிவகுமாா் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் வழங்கும் விழா, ரத்ததான முகாம் நடைபெற்றது.

ரத்த தான முகாமினை அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேஷ் ஆகியோா் தொடங்கி வைத்து நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா். தொடா்ந்து மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன் ரத்ததானம் செய்ததை தொடா்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் செல்வம், மாணிக்கம் உட்பட அதிமுக நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com