தம்மம்பட்டியில் அதிமுகவினா் அன்னதானம்

தம்மம்பட்டி, மே 12: முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாளையொட்டி அதிமுக சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் 70ஆவது பிறந்தநாளையொட்டி, தம்மம்பட்டி வள்ளலாா் கோயிலில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் துரை.ரமேஷ் தலைமை வகித்தாா். இதில் 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மேற்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com