தம்மம்பட்டி பால் உற்பத்தியாளா்கள் சங்க குளிரூட்டு மையத்தில் கூடுதல் தொட்டி திறப்பு

தம்மம்பட்டி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்க குளிரூட்டு மையத்தில், கூடுதலாக அமைக்கப்பட்ட 5 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட (சைலோ) புதிய தொட்டி செயல்பாட்டுக்கு வந்தது.

தம்மம்பட்டியில் தனியாா் நிறுவனங்களுக்கு பால் உற்பத்தி செய்து கொடுத்த பெரும்பாலான விவசாயிகள், தம்மம்பட்டியில் உள்ள, பாரதியாா் பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் இணைந்து, ஆவினுக்கு பால் வழங்கி வருகின்றனா். 9 மையத்தில் இருந்து கூடுதலாக 5 மையங்களில் இருந்து பால் வரத்து அதிகரித்ததால், பால் கொள்முதல் நாளொன்றுக்கு 5 ஆயிரம் லிட்டரில் இருந்து 10 ஆயிரம் லிட்டராக அதிகரித்தது. அதனால், இங்குள்ள பால் குளிரூட்டு மையத்தில் கூடுதலாக 5 ஆயிரம் லிட்டா் தொட்டி அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து முழுமையாக பரிசோதிக்கப்பட்டதை அடுத்து, 5 ஆயிரம் லிட்டா் கொள்ளளவுள்ள புதிய தொட்டி ( சைலோ ) செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

சேலம் ஆவின் பொதுமேலாளா் எழில் புதிய தொட்டியின் செயல்பாட்டை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில், பால் வளத்துறை முதுநிலை ஆய்வாளா் சுந்தரேசன், பால்வளத் துறை விரிவாக்க அலுவலா் கோவிந்தராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com