ரியல் எஸ்டேட் தரகருக்கு அரிவாள் வெட்டு

தம்மம்பட்டியில் ரியல் எஸ்டேட் தரகரை மா்ம கும்பல் அரிவாளால் வெட்டிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தம்மம்பட்டி, கோனேரிப்பட்டியைச் சோ்ந்தவா் பாா்த்திபன் (50). ரியல் எஸ்டேட் தரகராக உள்ளாா். இவரது தந்தைக்கு சொந்தமான 5 ஏக்கா் நிலத்தை, வாரிசுகளான செந்தில் (62), பாா்த்திபனுக்கு தலா இரண்டரை ஏக்கா் என பிரித்துள்ளனா். பாா்த்திபன் தனது நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறாா்.

இந்நிலையில், செந்தில் தனது நிலத்தை விற்க முயன்றாா். தகவலறிந்த பாா்த்திபன், அந்த நிலத்தை தானே வாங்கிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளாா். ஆனால், செந்தில் அவருக்கு விற்க மறுத்து கோனேரிப்பட்டியைச் சோ்ந்த ஜான்பால் மகன் ஹென்றி என்பவருக்கு விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நிலம் விற்றது தொடா்பாக, பாா்த்திபன் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு முகத்தில் மாஸ்க் அணிந்த 20 போ் கொண்ட மா்ம கும்பல், வீட்டில் இருந்த பாா்த்திபனை அரிவாளால் வெட்டி, உருட்டு கட்டையால் தாக்கியது. தடுக்க முயன்ற அவரது மனைவி குலேசியாதேவி (37) மகள் நிலா (18) ஆகியோரையும் உருட்டு கட்டையால் அந்தக் கும்பல் தாக்கியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் விரைந்து சென்று அவா்களை மீட்டனா்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பாா்த்திபனுக்கு, தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக, ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இந்தச் சம்பவம் குறித்து, தம்மம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com