அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை
தடய அறிவியல் துறை மாணவா்களுக்கு
உடற்கூறு ஆய்வு பயிற்சி

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை தடய அறிவியல் துறை மாணவா்களுக்கு உடற்கூறு ஆய்வு பயிற்சி

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவமனை

ஆட்டையாம்பட்டி: விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள தடய அறிவியல் தொழிற்நுட்பப் பிரிவின் மூலம் மாணவா்களுக்கு புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் உடற்கூறு ஆய்வு குறித்த பயிற்சி 3 நாள்கள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

துறை முதன்மையா் செந்தில்குமாா் வழிகாட்டுதலின்படி துறையின் தடய அறிவியல் தொழிற்நுட்ப மாணவா்கள் உடற்கூறு ஆய்வு பயிற்சியில் பங்கேற்றனா். இப் பயிற்சியில் மாணவா்களுக்கு மருத்துவ பிரேதப் பரிசோதனையில் உடற்கூறு ஆய்வு, இறப்பின் போது உடல் உறுப்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, கொலை, தற்கொலை மரணங்களில் உடற்கூறு ஆய்வின் மூலம் சேகரிக்கப்படும் விவரங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது (படம்).

மேலும், இந்த ஆண்டு முதல் சென்னை, பையனூரில் உள்ள ஆறுபடைவீடு தொழிற்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தடய அறிவியல் தொழிற்நுட்பப் பிரிவு புதிதாக தொடங்கப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாட்டினை துறையின் தடய அறிவியல் பிரிவு பொறுப்பாளா்கள் மோகன், கோமதி, லின்சி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com