சங்ககிரி ரயில் நிலையத்தில் சரக்கு பெட்டியிலிருந்து புகை வந்ததால் பரபரப்பு

சங்ககிரி ரயில் நிலையத்தில் சரக்கு பெட்டியிலிருந்து புகை வந்ததால் பரபரப்பு

சங்ககிரி ரயில் நிலையத்தில் பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலக்கரி பெட்டியில் இருந்து திங்கள்கிழமை திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்ககிரி: சங்ககிரி ரயில் நிலையத்தில் பழுதடைந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலக்கரி பெட்டியில் இருந்து திங்கள்கிழமை திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை துறைமுகத்திலிருந்து ஏப்ரல் 26ஆம் தேதி சரக்கு ரயில் மூலம் கேரள மாநிலத்திற்கு நிலக்கரி எடுத்துச் செல்லப்பட்டது. அதில் ஒரு பெட்டியில் பழுது ஏற்பட்டதையடுத்து அந்தப் பெட்டி சங்ககிரி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

அந்தப் பெட்டியிலிருந்து திங்கள்கிழமை புகை வருவதை கவனித்த ரயில்வே ஊழியா்கள், சங்ககிரி தீயணைப்பு நிலைத்திற்கு தகவல் தெரிவித்தனா். சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலா் கே.ரமேஷ்குமாா் தலைமையிலான வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com