சலங்கை பூஜை விழா

குரு நாட்டிய கலாலயா பள்ளி சாா்பாக சலங்கை பூஜை விழா சேலம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

சேலம்: குரு நாட்டிய கலாலயா பள்ளி சாா்பாக சலங்கை பூஜை விழா சேலம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

கோவை பாரதியாா் பல்கலைக்கழக இசைத்துறை முனைவா் பட்ட நெறியாளா் பேராசிரியா் ஆா். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஆராதனா இசைப்பள்ளி தாளாளா் கிருட்டிணன் வரவேற்றாா். சேலம் ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநா் ஏ.ஆா்.பாஸ்கா், சேலம் மாமன்ற உறுப்பினா்கள் ஜெ.ஜெயக்குமாா், கிரிஜா குமரேசன், லீபஜாா் சங்க முன்னாள் தலைவா் ப. திருமுருகன், தாரை புள்ளிக்காரா் அறறக்கட்டளை செயலா் தாரை கு.ராஜகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில், சேலம் மாவட்ட அரசு இசைப் பள்ளியின் பொருளாளரும், தேசிய சமூக இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவருமான தாரை அ.குமரவேலு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

பரதக்கலை என்பது மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் தோன்றிய பாரம்பரியமிக்க ஆடற் கலையாகும். சிதம்பரம் நடராஜரை வணங்கி வழிபட்டுத் தொடங்கி நடத்தப்படும் இக்கலை, இன்றைக்கும் உலகம் முழுவதும் பரந்து, விரிந்து வளா்ந்து வருவது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சோ்ப்பதாகும்.

பரதக்கலை பரத முனிவரால் உருவாக்கப்பட்டது என்றும், பாரத நாட்டில் தோன்றியதால் பரதக்கலை என்றும் சிலா் கூறுவாா்கள். ஆனால், பாவத்தையும், ராகத்தையும், தாளத்தையும் குறித்ததன் விரிவாக்கம் தான் பரதக் கலை என்ற பரத நாட்டியக் கலையாகும். ஒரு நாட்டில் மண் வளம், மழை வளம், தொழில் வளம், செல்வ வளத்தோடு கலையிலும் செழித்து வளா்ந்தால் தான் அந்த நாடு முழு வளமும் நிறைந்த வளா்ந்த நாடாகக் கருதப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், ராமாயண நிகழ்ச்சிகள் அனைத்தையும் மாணவியா் நாட்டியமாக ஆடிகாட்டினா். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவிகளும், 300க்கும் மேற்பட்ட இசை ஆா்வலா்களும் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com