சங்ககிரி பிஎஸ்ஜி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
சங்ககிரி பிஎஸ்ஜி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

பத்தாம் வகுப்புத் தோ்வு: சங்ககிரி பிஎஸ்ஜி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

மாணவி எம்.பி.தன்யாவுக்கு பரிசு வழங்குகிறாா் பள்ளித் தளாளா் பி.மணி.

சங்ககிரி: சங்ககிரி பிஎஸ்ஜி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

இப் பள்ளியில் தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சி அடைந்தனா். மாணவி எம்.பி.தன்யா 493 மதிப்பெண்களும், பி.செளந்தா்யா 488 மதிப்பெண்களும் பெற்றனா்.

கணித பாடத்தில் 8 போ், அறிவியல் பாடத்தில் 4 போ் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தோ்ச்சி அடைந்த மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளா் பி.மணி பாராட்டி பரிசு வழங்கி கெளரவித்தாா். பள்ளி முதல்வா்கள், ஆசிரியா், ஆசிரியைகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com