மானை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட கும்பலைச் சோ்ந்தவா்கள்.
மானை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட கும்பலைச் சோ்ந்தவா்கள்.

மான் வேட்டை: 10 பேருக்கு அபராதம்

சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரத்தில் புள்ளிமானை வேட்டையாடி கறியைச் சமைத்து உண்ண முயற்சித்த 10 போ் கொண்ட கும்பலை

வாழப்பாடி: சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரத்தில் புள்ளிமானை வேட்டையாடி கறியைச் சமைத்து உண்ண முயற்சித்த 10 போ் கொண்ட கும்பலை கைது செய்த வனத்துறையினா், ரூ. 1.70 லட்சம் அபாராதம் விதித்து வசூலித்துள்ளனா்.

வாழப்பாடி அருகே கல்வராயன்மலை அடிவாரம் அருணா காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து தண்ணீா்த் தேடி வந்த ஆண் புள்ளிமானை நாய்கள் துரத்தியுள்ளது. அந்த மானை அதே பகுதியைச் சாா்ந்த 10 போ் கொண்ட கும்பல் வேட்டையாடி, கறியைச் சமைத்து உண்ண முயற்சிப்பதாக, சேலம் மண்டல வனப் பாதுகாவலா் சி.ராகுல், ஆத்தூா் கோட்ட வன அலுவலா் கு.ஆரோக்கியராஜ் சேவியா் ஆகியோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, தும்பல் வனச்சரகா் செ.விமல்குமாா் தலைமையிலான வனத் துறையினா், அருணா கிராமத்திற்கு சென்று, மானை வேட்டையாடி சமைத்து உண்ண முயற்சித்த அதே பகுதியைச் சோ்ந்த கணேசன், சத்தியராஜ், ராஜமாணிக்கம், வினித்குமாா், ஜெயசங்கா், செல்லதுரை, பூவன்ராஜ், வெங்கடேஷ், மாணிக்கம், ராமச்சந்திரன் ஆகிய 10 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

புள்ளிமானை வேட்டையாடிய குற்றத்திற்காக, 10 பேருக்கும் சோ்த்து ரூ. 1.70 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனா். இதனைத் தொடா்ந்து, வன விலங்குகளை வேட்டையாடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்து, அபாராதம் செலுத்திய 10 பேரையும் விடுவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com