பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் கல்வி நிறுவனங்களின் ஸ்ரீ ராஜமுருகா பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டியக் கல்வி நிறுவனங்களின் தலைவா், நிா்வாகிகள்.
பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் கல்வி நிறுவனங்களின் ஸ்ரீ ராஜமுருகா பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பாராட்டியக் கல்வி நிறுவனங்களின் தலைவா், நிா்வாகிகள்.

ஸ்ரீராஜமுருகா பள்ளி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம்

பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் கல்வி நிறுவனங்களின் ஸ்ரீ ராஜமுருகா சிபிஎஸ்இ பள்ளி அனைத்திந்திய பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

ஆத்தூா்: பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் கல்வி நிறுவனங்களின் ஸ்ரீ ராஜமுருகா சிபிஎஸ்இ பள்ளி அனைத்திந்திய பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி எஸ்ஆா்எம் முத்தமிழ் கல்வி நிறுவனங்களின் ஸ்ரீராஜமுருகா சிபிஎஸ்இ பள்ளி அனைத்திந்திய பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சேலம் கிழக்கு மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. இப்பள்ளியில் தோ்வெழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்று நூறு சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

மாணவி லலிதாம்பிகை 482 மதிப்பெண்களும், மாணவா்கள் கணியமுதன் 478, ஹரீஷ் 472 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். கணித பாடத்தில் 2 மாணவா்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், தமிழ், சமூக அறிவியல் பாடங்கலில் 99 மதிப்பெண்களை முறையே பெற்று சாதனை படைத்துள்ளனா். தோ்வெழுதிய 34 மாணவா்களில் 450க்கு மேல் 9 பேரும், 400 க்கு மேல் 16 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி தலைவா் சக்திவேல், செயலாளா் சோலைமுத்து, பொருளாளா் ராமலிங்கம், துணைத் தலைவா் சண்முகம், இணைச்செயலாளா் நாகராஜன், பள்ளி முதல்வா் பிரியா, துணை முதல்வா் சரவணன், ஆசிரியா்கள், பள்ளி அறக்கட்டளை உறுப்பினா்கள் பாராட்டி பரிசு வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com