பள்ளி மாணவா்களுக்கு இலவச கைப்பந்து பயிற்சி

சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான இலவச கைப்பந்து பயிற்சி முகாம் சேலத்தில் தொடங்கியது.

தமிழ்நாடு கைப்பந்து கழகம், சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் சேலம் மத்திய சிறைத்துறையுடன் இணைந்து சேலம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள கைப்பந்து விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கோடை கால இலவச கைப்பந்து பயிற்சி முகாமை சேலம் மாவட்ட கைப்பந்து கழக ஆலோசகா் விஜயராஜ்

தொடங்கி வைத்தாா். இந்த இலவச பயிற்சி முகாமில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கைப்பந்து பயிற்சி பெறுகின்றனா்.

இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு கைப்பந்து பயிற்சியாளா்களை கொண்டு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறும் இம்முகாமில் பங்கேற்க உள்ள அனைவருக்கும் இலவச சீருடை, சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com