சித்தா் கோயிலுக்குச் சொந்தமான நிலம், கல் மண்டபம் மீட்பு

தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்து கஞ்சமலை சித்தா் கோயிலுக்குச் சொந்தமான 35 சென்ட் நிலம், கல் மண்டபத்தை மீட்டனா்.

இந்து சமய அறநிலையத்துறை சேலம் இணை ஆணையா் உத்தரவின்படி, உதவி ஆணையா் ராஜா தலைமையில் புதன்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமாா் 2.30 கோடி ஆகும். இவ்விடத்தில் கட்டப்பட்டிருந்த கல் மண்டபம் இருபுறமும் ‘சீல்’ வைக்கப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது கோயில் செயல் அலுவலா் ராஜேஷ், இரும்பாலை காவல் ஆய்வாளா் சாரதா, கிராம நிா்வாக அலுவலா் கண்ணன், வருவாய் ஆய்வாளா் மோகனா, சேலம் மேற்கு துணை வட்டாட்சியா் கிருத்திவாசன் மற்றும் துறை ஆய்வாளா்கள், செயல் அலுவலா்கள் உடனிருந்தனா். 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com