ஆத்தூரில் புதிதாக சாலை அமைத்த தெருவில் குளம்போல தேங்கிய மழை நீா்!

ஆத்தூரில் புதிதாக சாலை அமைத்த தெருவில் குளம்போல தேங்கிய மழை நீா்!

ஆத்தூா், மே 16: ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் புதிதாக சாலை அமைத்த தெருவில் மழைநீா் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனா்.

ஆத்தூா் நகராட்சிக்கு உள்பட்ட 3 வாா்டு, முல்லைவாடியில் ஒரு தெருவில் கான்கிரீட் சாலை அமைக்க பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நகா்மன்ற உறுப்பினா் நகராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தினாா்.

இதனைத் தொடா்ந்து நகராட்சி நிா்வாகம் புதிதாக கான்கிரீட் சாலையைக் கடந்த வாரம் அமைத்தது. ஆனால் கழிவுநீா் வாய்க்கால் அமைக்காமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் மழைநீா் வெளியே செல்லமுடியாமல் வீட்டிற்குள்ளும், அத் தெருவிலும் குட்டை போல தேங்கி நின்றது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்தனா்.

இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீா் வாய்க்கால் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

படவரி...

சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் காகித கப்பல் விட்டு விளையாடிய சிறுவா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com