கட்டடத் தொழிலாளி மா்மச் சாவு: பெண்ணிடம் போலீஸாா் விசாரணை

மேட்டூா், மே 16: மேட்டூா் அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், நெருப்பூா் அருகே உள்ள சிங்கிலி மேட்டைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (50). இவரது மகன் சின்னபையன் (23). திருமணமாகாதவா். இவா் சிறுத்தங்கல் மேட்டில் உள்ள தனது உறவினா் வீட்டில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தாா். இவருக்ரும் குஞ்சாண்டியூா், மலையன்காட்டைச் சோ்ந்த திவ்யா என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது.

திவ்யா தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறாா். இவா் சின்னபையனுடன் அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்துள்ளாா். இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி சிப்ஸ் கடை வைப்பதற்கு பணத்தை எடுத்துக் கொண்டு சின்னபையன் சென்றுள்ளாா். புதன்கிழமை மாலை மேட்டூா் அருகே உள்ள குஞ்சாண்டியூா், மலையன்காட்டில் உள்ள திவ்யா, சின்னபையன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினா்களுக்கு கைப்பேசி மூலம் தகவல் அளித்துள்ளாா். மேலும் சடலத்தை தருமபுரி மாவட்டம், சிறுத்தங்கல் மேட்டிற்கு எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளாா்.

இந்த நிலையில் தனது மகனின் இறப்பில் திவ்யா மீது சந்தேகம் இருப்பதாக கருமலைக்கூடல் போலீஸில் ஆறுமுகம் புகாா் அளித்துள்ளாா். காவல் ஆய்வாளா் முருகன், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். இந்தச் சம்பவம் குறித்து திவ்யாவிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com