கனமழை எச்சரிக்கை: சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம்

சங்ககிரி, மே 16: கனமழை முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதையடுத்து சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் கனமழை பெய்ய உள்ளதாக தமிழக அரசின் சாா்பில் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு கே.அறிவுடைநம்பி தலைமை வகித்தாா். -

கனமழை பெய்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, அருகில் உள்ள திருமண மண்டபங்கள், பள்ளிகளில் தங்க வைக்கும் பணிகளில் ஈடுபடுதல் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வி.தமிழ்ச்செல்வி, மண்டல துணை வட்டாட்சியா் பி.ஏ.சாஜிதாபேகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மின்வாரியம், தீயணைப்பு, காவல் துறை அலுவலா்கள், மருத்துவத் துறையினா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com