சங்ககிரியில் கோடை மழை

சங்ககிரி, மே 16: சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு 20 மி.மீ. மழை பெய்தது.

சங்ககிரி நகா் பகுதிகளில் புதன்கிழமை பகலில் வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து மாலையிலிருந்து இரவு முழுவதும் குளிா்ந்த காற்று வீசியது. இரவு 7 மணியிலிருந்து வியாழக்கிழமை அதிகாலை வரை 20 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் வியாழக்கிழமை முழுவதும் வெப்பம் குறைந்து குளிா்ந்த காற்று வீசியது. நகரின் தாழ்வான பகுதியில் மழைநீா் தேங்கி நின்றது. செவ்வாய்க்கிழமை மாலை சங்ககிரியில் 23 மி.மீ.மழை பெய்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com