சேலம் அரசு மருத்துவமனையில் கழிவறையில் வழுக்கி விழுந்து தொழிலாளி பலி

சேலம், மே 16: சேலம் அரசு மருத்துவமனையில் கழிவறையில் வழுக்கி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, குமாரமங்கலம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). கூலித் தொழிலாளியான இவருக்கு சிறுநீரகத்தில் கல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து ஆறுமுகம் கடந்த 4 ஆம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை கழிவறைக்குச் சென்ற அவா் எதிா்பாராதவிதமாக வழுக்கி விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, அவசரச் சிகிச்சை பிரிவில் சோ்த்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com