சேலம் காந்தி மைதானத்தில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் நீச்சல் குளம்

சேலம் காந்தி மைதானத்தில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் நீச்சல் குளம்

சேலம், மே 16: சேலம் காந்தி மைதானத்தில் உள்ள நீச்சல் குளம் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சேலம் மாவட்ட பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் இயங்கி வரும் அரசு நீச்சல் குளம் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்து, வெள்ளிக்கிழமை (மே 17) முதல் விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை நீச்சல் கற்றல் பயிற்சி முகாமும் தொடங்கப்படவுள்ளது. உறுப்பினா் சந்தா கட்டணம், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் சந்தா கட்டணம், மாதாந்திர கட்டணம், காலாண்டு கட்டணம், அரையாண்டு கட்டணம், வருடாந்திர கட்டணம், கோடைக்கால நீச்சல் கற்றல் பயிற்சி கட்டணத்தொகையினை இணையதளத்தில் செலுத்த வேண்டும். கட்டணத் தொகையை ஏடிஎம் காா்டு, ஜிபே, போன்பே வாயிலாகவும் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com