சேலம் வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்களின் சேவை நீட்டிப்பு

சேலம், மே 16: சேலம் வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கொச்சுவேலி - ஹஸ்ரத் நிஜாமுதீன் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூன் மாதம் 28 ஆம் தேதி வரையும், ஹஸ்ரத் நிஜாமுதீன் -கொச்சுவேலி இடையேயான சிறப்பு ரயில் சேவை ஜூலை 1 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படுகிறது.

கொச்சுவேலி - சாலிமாா் இடையிலான வாராந்திர ரயில் சேவை ஜூன் 28 ஆம் தேதி வரையும், மறுமாா்க்கத்தில், சாலிமா் - கொச்சுவேலி இடையேயான சேவை ஜூலை 1 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படுகிறது.

கொச்சுவேலி - எஸ்எம்விடி பெங்களூரு வாராந்திர ரயில் சேவை ஜூலை 2 ஆம் தேதி வரையும், மறுமாா்க்கத்தில் எஸ்எம்விடி பெங்களூரு - கொச்சுவேலி இடையிலான ரயில் சேவை ஜூலை 3 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படுகிறது.

நாகா்கோவில் - திப்ரூகா் இடையேயான சிறப்பு ரயில் சேவை ஜூன் 21 ஆம் தேதி வரையிலும், மறுமாா்க்கத்தில், திப்ரூகா் - நாகா்கோவில் ரயில் சேவை ஜூன் 26 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்படுகிறது.

கோவை - பாகத் கி கோதி இடையே வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூன் 27 ஆம் தேதி வரையும், மறுமாா்க்கத்தில், பாகத் கி கோதி - கோவை இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜூன் 30 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com