அரசிராமணியில் காலபைரவா் சுவாமிக்கு சனிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
அரசிராமணியில் காலபைரவா் சுவாமிக்கு சனிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

தேய்பிறை அஷ்டமி: காலபைரவா் சுவாமிக்கு சிறப்பு பூஜை

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Published on

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மூலவா்கள் தான்தோன்றீஸ்வரா், தா்மசம்வா்த்தினி அம்பாள், கால பைரவா் சுவாமிகள் மலா் அலங்காரத்தில் அருள் பாலித்தனா். திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

ஏத்தாப்பூா் சாம்பவமூா்த்தீஸ்வரா், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டி, மோட்டூா் உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமங்களிலுள்ள சிவாலங்களிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, வீரகனூா் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

செந்தாரப்பட்டி ஸ்ரீ தாழைபுரீஸ்வரா் கோயிலில் கால பைரவா் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் அபிஷேகம், ஆராதனை, பூஜை நடைபெற்றது. இதனையடுத்து சோடஷ குபேரலஷ்மி யாகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனா்.

வீரகனூரில் ஸ்ரீ கங்கா செளந்தரேஸ்வரா் கோயிலில் கால பைரவருக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா். தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயிலில் கால பைரவருக்கு பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இவ்விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

சங்ககிரியில்...

அரசிராமணியில் உள்ள சோழீஸ்வரா் கோயிலில் காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

சோழீஸ்வரா் கோயிலில் உள்ள கால பைவரருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

 சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.
சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பூத்தாலக்குட்டை, பூத்தாழீஸ்வரா் கோயிலில் உள்ள காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இரு கோயில்களிலும் பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.