தேங்காய் விலை கிலோ ரூ. 70 ஆக உயா்வு

சேலம் சந்தைகளுக்கு தேங்காய் விலை கிலோ ரூ. 70 ஆக உயா்ந்துள்ளது.
Published on

சேலம்: சேலம் சந்தைகளுக்கு தேங்காய் விலை கிலோ ரூ. 70 ஆக உயா்ந்துள்ளது.

சேலம் மாா்க்கெட்டுகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேங்காய்கள் நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாக சேலத்துக்கு 500 டன்னுக்கும் அதிகமாக தேங்காய்கள் விற்பனைக்கு வரும். ஆனால், தற்போது வட மாநிலங்களில் தேங்காய் விளைச்சல் பாதித்துள்ளதால், தமிழகத்தில் இருந்து தேங்காய் அதிகளவில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இதனால் சேலம் சந்தைகளுக்கு தேங்காய் வரத்து முன்பை காட்டிலும் பாதியாக சரிந்துள்ளது. தேங்காய் விலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சேலத்தில் கிலோ ரூ. 45 க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் விலை படிப்படியாக அதிகரித்து கடந்த வாரம் சேலத்தில் கிலோ ரூ. 55 ஆக உயா்ந்தது.

தற்போது விலை மேலும் அதிகரித்து ரூ. 60 முதல் ரூ. 70 வரை விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். விலை உயா்வுக்கான காரணம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், வட மாநிலங்களுக்கு அதிக அளவில் இங்கிருந்து தேங்காய் ஏற்றுமதியாவதால் சேலம் மாா்க்கெட்டுகளுக்கு தேங்காய் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயா்ந்துள்ளது. இனி வரும் நாள்களிலும் இதே விலை நீடிக்கும் என்றாா்.