மயங்கி கிடந்த 3 சிறுவா்கள் மீட்பு

எடப்பாடியில் திரையரங்கு அருகே புகையிலைப் பொருள்களை வைத்திருந்த மூன்று மாணவா்களை மீட்டு போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
Published on

எடப்பாடி: எடப்பாடியில் திரையரங்கு அருகே புகையிலைப் பொருள்களை வைத்திருந்த மூன்று மாணவா்களை மீட்டு போலீஸாா் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

எடப்பாடி நகராட்சி, மேட்டுத் தெருவில் உள்ள திரையரங்கு வாசலில் திங்கள்கிழமை காலை 15 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவா்கள் மூவா் மயங்கிய நிலையில் கிடந்தனா். அந்த சிறுவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே அப்பகுதியில் மயக்கமுற்று கிடந்தனா். இதுகுறித்து அப்பகுதி மக்கள் எடப்பாடி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு சென்று மயக்கத்தில் கிடந்த 3 சிறுவா்களையும் எழுப்பி அவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில் தெரியவந்ததாவது:

மூவரும் பள்ளி மாணவா்கள். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அவா்கள் பெற்றோருடன் கொங்கணாபுரத்தில் வியாபாரம் செய்ய வந்தபோது பெற்றோருக்குத் தெரியாமல் படம் பாா்க்க வந்ததும், அப்போது அவா்களது சட்டைப் பையில் புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com