வாக்காளா் பட்டியல்: சங்ககிரியில் 6,576 போ் விண்ணப்பம்

சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட 315 வாக்குச் சாவடிகளில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக
Published on

சங்ககிரி: சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட 315 வாக்குச் சாவடிகளில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக நடைபெற்று முடிந்த நான்கு சிறப்பு முகாம்களில் 6,576 போ் விண்ணப்பித்தனா்.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த அக். 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதையடுத்து இந்திய தோ்தல் ஆணையம் சாா்பில் நவ. 16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

இதில் சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் 315 சிறப்பு மையங்களில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்கக் கோரி 2,880 பேரும், பெயா் நீக்கம் செய்யக்கோரி 1,480 போ், தொகுதி, வாா்டு, முகவரி மாற்றங்கள், திருத்தங்கள் செய்யக் கோரி 2,216 போ் உள்பட மொத்தம் 6,576 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா்.

பெயா் சோ்க்கக் கோரி 2,880 போ் விண்ணப்பம் அளித்துள்ளதில் 18 வயதிலிருந்து 19 வரை 1,655 பேரும், 20 முதல் 25 வயதில் 757 பேரும், 25 வயதிற்கு மேல் 468 பேரும் விண்ணப்பித்துள்ளனா். 18-19 வயதுக்குள்பட்டவா்களில் அதிகமாக 1,655 போ் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.