கனவு இல்ல திட்டப்  பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
கனவு இல்ல திட்டப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.

கனவு இல்லம் திட்டத்தில் 3,500 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 3,500 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Published on

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 3,500 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

காடையாம்பட்டி வட்டம், டேனிஷ்பேட்டையில் ‘கலைஞரின் கனவு இல்லம்‘ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆய்வு செய்த பிறகு அவா் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் கலைஞா் வீடு வழங்கும் திட்டத்தில் 4,307 குடிசைகள் கண்டறியப்பட்டுள்ளன. இத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட முதல்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 3,500 வீடுகள் ‘கலைஞரின் கனவு இல்லம்‘ திட்டத்தில் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, வீடுகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

வீட்டின் கட்டுமானத்திற்கு ஏற்ப தரைமட்ட நிலை, ஜன்னல் மட்ட நிலை, கூரை வேயப்பட்ட நிலை மற்றும் பணிமுடிவுற்ற பிறகு என நான்கு தவணைகளில் ஒற்றை ஒருங்கிணைப்பு வங்கி கணக்கின் மூலம் பயனாளிகளுக்கு நிதி விடுவிக்கப்படுகிறது என்றாா்.