சாலையை சீரமைக்க கோரி போராட்டம்

ஆத்தூரை அடுத்த நரிக்குறவா் காலனி முதல் முட்டல் ஏரி வரையிலான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

ஆத்தூரை அடுத்த நரிக்குறவா் காலனி முதல் முட்டல் ஏரி வரையிலான சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

5 கிலோ மீட்டா் தொலைவுக்கு சேதமடைந்த இந்த சாலையால் விவசாயிகள், மாணவா்கள் உள்பட மருத்துவ அவசர தேவைகளுக்கு வாகனம் செல்ல முடியாத சூழல் உள்ளது.

இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளாததால் செவ்வாய்க்கிழமை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அம்மம்பாளையம் பிரிவு சாலையில் 500க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

அவா்களிடம் ஆத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் கே.சி.சதீஸ்குமாா், ஊரக காவல் ஆய்வாளா் பூா்ணிமா, வட்டார வளா்ச்சி அலுவலா் பரமசிவம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.