~ ~
~ ~

குடிநீா் கேட்டு சாலை மறியல்: அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

கூத்தம்பாளையம் கிராமத்தில் குடிநீா் விநியோக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

கூத்தம்பாளையம் கிராமத்தில் குடிநீா் விநியோக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மகுடஞ்சாவடி ஒன்றியம், அ.புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட கூத்தம்பாளையத்தில் பல மாதங்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து ஊராட்சிமன்ற தலைவா், அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை குடிநீா் விநியோகிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் கூத்தம்பாளையம் பேருந்தத்தில் காலி குடத்துடன் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினா். தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி நிா்வாகத்தினா் நிகழ்விடம் சென்று சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனா். இதையேற்று பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

படவிளக்கம்....

மகுடஞ்சாவடி அருகே கூத்தம்பாளையத்தில் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

X
Dinamani
www.dinamani.com