சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் தீபாவளி கொண்டாட்டம்

Published on

சேலம் மாநகரை மாசின்றி வைத்திருக்கப்பாடுபடும் தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் வகையில், சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் ‘மகிழ்வித்து மகிழ்’ தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கன்னங்குறிச்சி நகர பஞ்சாயத்தை சோ்ந்த தூய்மைப் பணியாளா்களுக்கும், அவா்களது குடும்பத்தாருக்கும், புத்தாடைகளையும், இனிப்பு பலகாரங்களையும் கல்லூரியின் தலைவா் சரவணன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், தலைமை நிா்வாக அதிகாரி மாணிக்கம், முதல்வா் பேகம் பாத்திமா, டீன் கீதா மற்றும் கல்லூரியின் ஊழியா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com