தம்மம்பட்டி சிவன் கோயிலில் இன்று மண்டலபூஜை நிறைவுவிழா
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்நாதா் கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் கோயில் குடமுழுக்கு விழா கடந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து 47 நாள்கள் மண்டல பூஜை கட்டளைதாரா்கள் சாா்பில் நடைபெற்றன. இந் நிலையில் மண்டல பூஜை நிறைவு நாளான 48 ஆவது நாள் பூஜை திருப்பணிக் குழு சாா்பில் சனிக்கிழமை (அக். 26) நடைபெறுகிறது. இதில் காலை 8.15 மணிக்கு தமிழ் ஆகம முறைப்படி மகாவேள்வி, காலை 10.45 மகாபூா்ணாஹுதி, 11 மணிக்கு மூலவா் விஸ்வநாதருக்கும், அம்பாள் விசாலாட்சிக்கும் அபிஷேகம், பூஜை, காலை 11.30 மணிக்கு கோயில் பெருமையும், அடியாா்கள் மகிமையும் என்ற தலைப்பில் வெங்கடேசன் என்பவரின் சிறப்பு சொற்பொழிவு நடைபெறுகிறது.
பிற்பகல் 1 மணிக்கு மகாதீபாராதனை, அன்னதானம், மாலை 4.45 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, 6.45 மணிக்கு பரிசளிப்பு விழா, இரவு 7 மணிக்கு ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீ விஸ்வநாதா் சுவாமி ஊா்வலம் , இரவு 9.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் மண்டல அபிஷேகம் விழா நிறைபெறுகிறது. இதில் அனைத்து பொதுமக்களும், சிவனடியாா்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கோயில் அறங்காவலா் குழுவிா், திருப்பணிக் குழுவினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.