சேலம்
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 31,575 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 31,575 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து அணை நீா்மட்டம் 101.40அடியில் இருந்து 102.92அடியாக உயா்ந்துள்ளது. 2 நாள்களில் அணை நீா்மட்டம் 2.91அடி உயா்ந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 29,307 கனஅடியிலிருந்து 31,575 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7,500 கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 68.67 டி.எம்.சி.யாக உள்ளது.